எங்கள் அணியை ஆதரித்து ஆரவாரம் செய்ய காத்திருக்கும் பார்வையாளர்களுக்கும் சிறப்பு வணக்கம்.
சீனாவின் மக்கள் தொகையை விட அமெரிக்காவின் மக்கள் தொகை குறைவு... ஆனால் இராணுவம் மற்றும் பொருளாதாரத்தில் அமெரிக்கா தான் வலிமையான தேசம். ஆகவே "ஆண்களே" அணியினரே -- உங்கள எல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு--- குறிப்பா என் அக்காவ பாத்தா இன்னும் பாவமா இருக்கு....
நடுவர் அவர்களே, உங்களிடம் ஒரு தண்ணீர் பாட்டிலை கொடுத்து அதன் மூடியை கழட்டி கொடுக்க சொல்கிறார் ஒருவர். நீங்களும் கழட்ட முயற்சிகிறிங்க. அந்த மூடி வெறுமனே சுற்றுகிறது(இந்திய தயாரிப்பு). கழட்ட முடியவில்லை. நீங்கள் என்ன செய்விங்க?. என்னால முடியலனு அந்த பாட்டில கொடுத்து விடுவிர்களா? நிச்சயம் அப்படி செய்ய மாட்டிங்க. எப்படியாவது முயற்சி பண்ணி திறந்து கொடுத்து விடுவிர்கள். ஏனென்றால் மனிதனுக்கு பொதுவாகவே வீம்பு , வைராக்கியம் அதிகம். அதிலும் ஆண்களுக்கு கூடதலாகவே இருக்கும்.
காதல்னு வரும் போது இந்த வீம்பும் வைராக்கியமும் தான் , நமக்கு நாமே வச்சிகிற சரியான ஆப்பு. நம்மோட இந்த வீம்பு , வைராக்கியத்தை பெண்கள் மிக அற்புதமாக பயன்படுத்தி கொள்வார்கள்.
நாம பாட்டுக்கு நம்ம வேலைய பாத்துட்டு இருப்போம். ஆனா அவங்க நம்மல அப்படி இருக்க விட மாட்டங்க. அவங்க நிறத்துக்கும் உடல் அமைப்புக்கும் சற்றும் பொருந்தாத நிறத்துலயும் டிசைன்லயும் உடை உடுத்திட்டு வருவாங்க. என்னடா இது, இப்படி கூடவா ட்ரெஸ் பன்னுவாங்க? அப்படினு நெனச்சி தான் நாம அவங்கள் பார்ப்போம். ஆனா அவங்களுக்கு இது புரியாது. ஏதோ நாம அவங்கள ரசிச்சி தான் அப்படி பார்ப்பதாக நினைத்து கொண்டு , தினம் தினம் அப்படியே வருவாங்க. அதோட நிறுத்திக்காம , நம்ம பார்வையில் பட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி நம் அருகில் வந்து வந்து செல்வார்கள். நம் கண்ணில் படும் படியும், மனதை தொடும் படியும் பல நல்ல காரியங்களை செய்வார்கள்.
நாம் எதேச்சயாக அவர்களை பார்த்து விட்டாலும், எதோ அவர்களை பார்ப்பதற்காகவே திரும்பியதாக நினைத்து கொண்டு போகிற போக்கில் ஒரு புன்னகையை வேறு விட்டு செல்வார்கள். அவர்கள் தொழிகளுடன் சேர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது நாம் அவர்கள் பார்வையில் படும் படி இருந்து விட்டால் போதும். நமக்கு எந்த சம்பந்தமும் இல்லாத விஷயத்தை பற்றி பேசிகொண்டிருந்தாலும் நம்மை பார்த்துக் கொண்டு தான் பேசுவார்கள்.
உடனே நமக்கு இங்க ஒரு ப்ளாஷ் பேக் வரும்.
" சும்மா சும்மா நம்ம பக்கம் வந்துட்டு போறா
பார்த்து சிரிக்கிரா
நம்மல பாத்துக்கிட்டே
வேற யார்க்கிட்டயோ பேசறா"
ஒருவேளை இது அதுவா இருக்குமோ? என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே , நம்ம அனுமதி இல்லாமலே வியர்வை சுரப்பிகள் வழியாக ஆயிரக்கணக்கான பட்டாம் பூச்சிகள் நம் உடலுக்குள் புகுந்து பறக்க ஆரம்பித்து விடும்.
இதெல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம் தான் என்று புரிவதற்குள் அந்த பெண் அருகில் நாம் இருப்போம் காதலை சொல்ல. ஆண் சொல்லிய உடனே அந்த பெண் நம் காதலை அந்த பெண் ஏற்றுகொள்ள மாட்டாள். ஒருவேளை அவளுக்கும் அவன் மேல் காதல் இருந்தாலும். ஏனன்றால், உடனே ஒப்புக்கொண்டால் அவர்கள் தன் மானதிற்கு இழுக்கு வந்துடுமாம். இவள் இதுக்கு தான் காத்துக்கொண்டிருந்தால் என்று யாரேனும் நினைத்து விட்டால் என்ன செய்வது என்ற பயம். மேலும், அவர்களுக்கு மிக நன்றாக தெரியும். ஆணின் மனதில் எதேனும் ஒன்றின் மீது பற்று ஏற்பட்டுவிட்டால் அதை நிறைவேற்றமால் விட மாட்டான் என்று.
இதல்லாம் நமக்கு புரியாது.
அவள் மறுப்பு அவமானமாய் படும்.
ஏற்கனவே இருக்கும்
காதல் அமிலமும்
புதியதாய் சேர்ந்த
அவமானம் என்ற காரமும்
வினை புரிய ஆரம்பித்து விடும்.
இந்த வினையின் வேகம் குறையாமல்
வீம்பு மற்றும் வைராக்கியம் என்ற வினை ஊக்கிகள் பார்த்துக்கொள்ளும்.
பிறகென்ன?
சில பல முயற்சிகளுக்கு பிறகு அந்த பெண்ணின் மனதில் இருந்த காதலை வெளிச்சதுக்கு கொன்டுவந்து இவன் இருட்டில் மாட்டிக்கொள்வான்.
வீம்புக்கும் வைராக்கியத்துக்கும் என் அக்கா கொடுக்கும் உதாரணம்.
<<சமீபத்தில் சிறிய அளவிலான ஒரு புறநகர் மிருகக்காட்சி சாலைக்குச்
சென்றிருந்தேன். மயிலொன்று தோகை விரித்தாடியது. பெண் மயில் கண்டுகொள்ளவேயில்லை.
அது பாட்டுக்கு நடந்து திரிந்துகொண்டிருந்தது. ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஆண்
மயிலுக்கோ வேறு எண்ணமே மண்டைக்குள் ஓடவில்லை. சுற்றிச் சுற்றி, பின்தொடர்ந்து
முன்தொடர்ந்து, பின்னால் போனால் முன்னால் வந்து, கண்டுகொள்ளாமல் போனால்
மீண்டும் வந்து... இப்படியாக அரும்பாடுபட்டுக்கொண்டிருந்தது. இதையே தான்
மனிதகுல ஆண்மக்களும் தொன்றுதொட்டு அன்று முதல் இன்று வரை
செய்துகொண்டிருக்கிறார்கள். இன்றும் செய்கிறார்கள். இனியும் செய்வார்கள். >>
<<கடைக்கண் பார்வை என்பதைக் காதல் குளத்தில் கல்லெறிவதற்கு ஒப்பிடமுடியாது.ஒரு
பெண் கடைக்கண் பார்வை வீசினாலும் மனம் விரும்பினாலும் மௌனம் காப்பாள். காதலைச்
சொல்லாமல் தனக்குள் மருகிக்கொண்டிருந்தாலும் சரி, முதல் அடி
எடுத்துவைக்கமாட்டாள். அவனோ இதைக் கண்டுகொள்வான்>>
கடைக்கண் பார்வையை வேண்டுமானால் கல் எறிவதற்கு ஒப்பிட முடியாமல் இருக்கலாம்.
ஆனால் மனம் விரும்புவதை என்னவென்று எடுத்துக்கொள்வது?
இல்லாத ஒன்றை யாரும் கண்டுகொள்ள முடியாது... என் அன்பு அக்காவின் கருத்து படியே சொல்வதென்றால் , முதலில் காதல் குளத்தில் கல் எறிவது பெண்தான். அதை கன்டுகொள்வதுதான் ஆண்.
காதல் விதையை விதைபது பெண். அதற்கு நீர் பாய்ச்சி உரம் போட்டு வளர்பது மட்டும் தான் ஆண்.
ஆகவே நடுவர் அங்கிள்,
அமைதியாய் இருக்கும் ஆண் மனதில் காதல் விதையை விதைத்து, காதல் குளத்தில் முதலில் கல்லெறிவது பெண்களே என சொல்லிக்கொண்டு "அய்யோ பாவம்" அணியினருக்கு என் ஆழ்ந்த அனுதாபத்தை சொல்லிக்கொண்டு முடித்துக்கொள்கிறேன்.
அடுத்து எங்கள் அணியில் மதுமிதா, மீரான், நம்பிக்கை பாண்டியன் , ஜோ தம்பி , ஹயா , நா.ஆனந்த குமார் கலக்க போறாங்க பாருங்க...
வாய்ப்புக்கு நன்றி.
--
*Gandhi..SSSanjaiGandhi*
Its None of my Business What you Think of Me.
No comments:
Post a Comment