Sunday, 6 May 2007

என் உரைக்கு நடுவர் ரசிகவ் ஞானியார் comment

 //நடுவர் அங்கிள் ( கல்யாணம் ஆய்டிச்சில்ல!) ரொம்ப நல்லவர்னு எனக்கு
> தெரியும்.. அவர் ரொம்ப விவரமானவர்னும் தெரியும்... ஆகவே நல்லதொரு தீர்ப்ப
> சொல்லுவார் என்ற நம்பிக்கையில் முதலில் நடுவர் அங்கிளுக்கு வணக்கம்.//

நான் உங்களை அங்கிள்னு அழைத்துவிடக்கூடாதுன்னு முந்திகிட்டீங்க...உங்க
முன்னெச்சரிக்கைக்கு பாராட்டுக்கள்..  :)

இந்த நாட்டாமை  ஆட்களைப் பார்த்து தீர்ப்பு சொல்லமாட்டான்...கருத்துக்கள்தான்
முதலிடம்...

( நாட்டாமை தீர்ப்ப மாத்துன்னு இப்பவே எங்கிருந்தோ சத்தம் கேட்குது :)    )

    ஏனென்றால் மனிதனுக்கு பொதுவாகவே வீம்பு , வைராக்கியம் அதிகம். அதிலும்

> ஆண்களுக்கு கூடதலாகவே இருக்கும்.

 
மூடியைக் கழட்டுறமாதிரி ஆரம்பிச்சு நம் இதயத்தை கழட்டிட்டாருப்பா சஞ்சய்காந்தி.

பொதுவாகவே ஆண்களுக்கு பெண்களை விடவும் வீம்பு வைராக்கியம் அதிகம் அதானால் அவுக
முதல்ல சொல்லமாட்டாக...பெண்கள்தான் சொல்லுவாங்கன்னு சொல்றாரு... அது என்னவோ
எனக்கு சரியாகத்தான் படுதுங்க..

 . என்னடா இது, இப்படி கூடவா ட்ரெஸ் பன்னுவாங்க? அப்படினு நெனச்சி தான் நாம

> அவங்கள் பார்ப்போம். ஆனா அவங்களுக்கு இது புரியாது. ஏதோ நாம அவங்கள ரசிச்சி
> தான் அப்படி பார்ப்பதாக நினைத்து கொண்டு , தினம் தினம் அப்படியே வருவாங்க.

 
நாம யதேச்சையாகத்தான் பார்ப்போம் ஆனா அவங்கதான் நம்ம அழகை அவன் ரசிக்கிறானோ
என்று நினைத்துக்கொண்டு, தோழிகளிடம் சிரிப்பது போல் நடிப்பது , அடிக்கடி
மேக்கப் கலையாமல் பார்த்துக்கொள்வது, என்று இல்லாத சேட்டைகள் எல்லாம்
பண்ணுவார்கள;

அதனால ஆண்கள் கல்லெறிவது போல நினைச்சாலும் முதல்ல பெண்கள் தான் கல்லெறியுறாங்க
அப்படின்னு நச்சுன்னு சொல்றாரு நம் சஞ்சய்

 நாம் எதேச்சயாக அவர்களை பார்த்து விட்டாலும், எதோ அவர்களை பார்ப்பதற்காகவே

> திரும்பியதாக நினைத்து கொண்டு போகிற போக்கில் ஒரு புன்னகையை வேறு விட்டு
> செல்வார்கள்.

 
தனிப்பட்ட அனுபவத்துல சொல்வது போல..இருந்தாலும் உண்மையைத்தான் சொல்றாரு...
பாவம் எதிரணிக்காரங்கள இப்ப பார்க்க பரிதாமத்தான் இருக்கு...

> சில பல முயற்சிகளுக்கு பிறகு அந்த பெண்ணின் மனதில் இருந்த காதலை
> வெளிச்சதுக்கு கொன்டுவந்து இவன் இருட்டில் மாட்டிக்கொள்வான்.

 
அவள் மனசுல வெளிச்சத்தைக் கொண்டு வந்துட்டு இவன் இருட்டுல போய்
உட்கார்ந்துக்குடுவான்னு கவித்துவமா சொல்லியிருக்காரு பாருங்க..

 ஆகவே நடுவர் அங்கிள்,

> அமைதியாய் இருக்கும் ஆண் மனதில் காதல் விதையை விதைத்து, காதல் குளத்தில்
> முதலில் கல்லெறிவது பெண்களே என சொல்லிக்கொண்டு "அய்யோ பாவம்" அணியினருக்கு என்
> ஆழ்ந்த அனுதாபத்தை சொல்லிக்கொண்டு முடித்துக்கொள்கிறேன்.

 
காதலை எடுத்துச் சொன்னால்
மறுத்திடுவாளோ என்று
அவள் காதலிப்பாள் என்ற கற்பனையிலையே
 உயிர் வாழ்கிறான்

 > வீம்புக்கும் வைராக்கியத்துக்கும் என் அக்கா கொடுக்கும் உதாரணம்.

> <<சமீபத்தில் சிறிய அளவிலான ஒரு புறநகர் மிருகக்காட்சி சாலைக்குச்
> சென்றிருந்தேன். மயிலொன்று தோகை விரித்தாடியது. பெண் மயில்
> கண்டுகொள்ளவேயில்லை.
> அது பாட்டுக்கு நடந்து திரிந்துகொண்டிருந்தது. ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
> ஆண்
> மயிலுக்கோ வேறு எண்ணமே மண்டைக்குள் ஓடவில்லை. சுற்றிச் சுற்றி, பின்தொடர்ந்து

> முன்தொடர்ந்து, பின்னால் போனால் முன்னால் வந்து, கண்டுகொள்ளாமல் போனால்
> மீண்டும் வந்து... இப்படியாக அரும்பாடுபட்டுக்கொண்டிருந்தது. இதையே தான்
> மனிதகுல ஆண்மக்களும் தொன்றுதொட்டு அன்று முதல் இன்று வரை
> செய்துகொண்டிருக்கிறார்கள். இன்றும் செய்கிறார்கள். இனியும் செய்வார்கள். >>

> <<கடைக்கண் பார்வை என்பதைக் காதல் குளத்தில் கல்லெறிவதற்கு
> ஒப்பிடமுடியாது.ஒரு
> பெண் கடைக்கண் பார்வை வீசினாலும் மனம் விரும்பினாலும் மௌனம் காப்பாள்.
> காதலைச்
> சொல்லாமல் தனக்குள் மருகிக்கொண்டிருந்தாலும் சரி, முதல் அடி
> எடுத்துவைக்கமாட்டாள். அவனோ இதைக் கண்டுகொள்வான்>>

> கடைக்கண் பார்வையை வேண்டுமானால் கல் எறிவதற்கு ஒப்பிட முடியாமல் இருக்கலாம்.
> ஆனால் மனம் விரும்புவதை என்னவென்று எடுத்துக்கொள்வது?
> இல்லாத ஒன்றை யாரும் கண்டுகொள்ள முடியாது... என் அன்பு அக்காவின் கருத்து
> படியே சொல்வதென்றால் , முதலில் காதல் குளத்தில் கல் எறிவது பெண்தான். அதை
> கன்டுகொள்வதுதான் ஆண்.
> காதல் விதையை விதைபது பெண். அதற்கு நீர் பாய்ச்சி உரம் போட்டு வளர்பது
> மட்டும் தான் ஆண்.

> ஆகவே நடுவர் அங்கிள்,
> அமைதியாய் இருக்கும் ஆண் மனதில் காதல் விதையை விதைத்து, காதல் குளத்தில்
> முதலில் கல்லெறிவது பெண்களே என சொல்லிக்கொண்டு "அய்யோ பாவம்" அணியினருக்கு என்
> ஆழ்ந்த அனுதாபத்தை சொல்லிக்கொண்டு முடித்துக்கொள்கிறேன்.

காதலை எடுத்துச் சொன்னால்
மறுத்திடுவாளோ என்று
ஆகவே பெண்கள்தான் காதல் குளத்தில் கல்லெறகிறார்கள் என்று பேசிவிட்டு
எதிரணியைமுறைச்சுட்டு போறாரு நம்ம சஞ்சய்..அடுத்து மூர்த்தி அவர்கள் ஆண்களேன்னு
பேசறுதுக்காக வேகமாக வர்றாரு..பார்த்து கீழே விழுந்திடாம்ம வாங்க *மூர்த்தி...*

- ரசிகவ் ஞானியார்

 
--
*Gandhi..SSSanjaiGandhi*
     Its None of my Business What you Think of Me.

1 comment:

 
sanjai