Sunday, 6 May 2007

அன்புடன் குழுமத்தில் பட்டிமன்றம்...

அன்புடன் குழுமத்தில் ஒரு அற்புதமான தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. தலைப்பு :  "காதல் குளத்தில் கல்லெறிபவர்கள் ஆண்களா? பெண்களா?"

பெண்களே என்ற தலைப்பில் 10 பேரும், ஆண்க்களே என்ற தலைப்பில் 8 பேரும் பேசுகிறோம்.
பெண்களே என்ற அணியின் முதல் உரையை நான் தொடங்கி வைத்தேன். எனக்கு மேடைகளில் பேச வேண்டும் என்ற ஆசை பள்ளி பருவம் முதல் இருந்தது. அப்போதெல்லாம் மேடையை கண்டதும் நடுக்கம் வந்து விடும். பல முறை பேச்சு  போட்டிகளில் பெயர் கொடுத்து, பேச வேண்டிய நேரத்தில் ஓடி ஒளிந்து கொள்வேன்.பிறகு கல்லூரியில் வேதியியல் துறை செயலாளராக இருந்த போது அவ்வப்போது மேடையில் பேசியதுண்டு.

அன்புடனில் வித்தியாசமான வாய்ப்பு. இங்கே மேடை ஏற வேண்டியதில்லை. ஆகவே ஒரு குறுட்டு தைரியத்துடன் களம் இறங்கி விட்டேன்.
முதலில் என் அன்பு சேது அக்கா பேசியது,
பிறகு, எனக்கே கொஞ்சம் சிறுபிள்ளை தனமாக இருந்த என் உரை ....

 

--
*Gandhi..SSSanjaiGandhi*
Its None of my Business What you Think of Me.

No comments:

 
sanjai