Monday, 26 March 2007

சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-!!!

 
சின்ன சின்ன டிப்ஸ்:
- எந்த கம்பெனிக்கு ஆப்டிடுயுட் டெஸ்ட் (Aptitude Test)க்கு செல்வதென்றாலும் அதற்கு முன்பு அந்த கம்பெனி பழைய கேள்வித்தாள்களை படித்துவிட்டு செல்லவும். (நான் சிண்டல் (syntel) எழுத போகும்போது பழைய கேள்விகளை படித்துவிட்டு போனதால் எளிதாக தேர்வானேன். 50 கேள்விகளில் 30 கேள்விகள் பழைய கேள்விகளில் இருந்தே வந்தது. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் நான் அதில் சேரவில்லை). www.freshersworld.com ல் பழைய கேள்வித்தாள்கள் இருக்கும்.

- முடிந்த வரை நண்பர்களுக்கு உதவவும். எந்த கம்பெனியாவது வாக் இன் (Walk In) நடத்தினால், நண்பர்கள் அனைவருக்கும் சொல்லவும். எங்கே அவர்கள் நமக்கு போட்டியாக வந்துவிடுவார்களோ என்று நினைக்கவேண்டாம். பொறாமை நம்மை அழித்துவிடும். (நண்பர்களுக்கு நான் எந்த கம்பெனிக்கு தயார் செய்யும் முறையை சொல்லி கொடுத்தேனோ அந்த கம்பெனியிலே சேர்ந்தேன்)

-1 மணி நேரத்தில் 50-60 கேள்விகள் என்று ஆப்டிடுயுட் டெஸ்ட் இருந்தால், முதலில் எல்லா கேள்விகளையும் வாசிக்கவும். ஏனெனில் ஒரு சில கேள்விகளுக்கு படித்தவுடனே விடை தெரிந்துவிடும் (Next day after Tuesday...1,3,5,?). அதனால் துவக்கத்தில் கொஞ்சம் கடினமாக இருக்கும் கேள்விகளில் நேரத்தை வீணாக்காதீர்கள்.

- இன்போஸிஸ் தயார் செய்ய: முதலில் Quantitative Aptitude, அடுத்து shakuntala Devi's Puzzle to Puzzle You & More Puzzles, அடுத்து Puzzles and Teasers by George Summers, மிக முக்கியமானது பழைய கேள்வித்தாள்கள்.

- சின்ன சின்ன ப்ரோகிராம் எந்த நேரத்தில் கொடுத்தாலும் போடுமாறு தெரிந்து வைத்துக் கொள்ளவும். (Fibanocci Series, Find Prime Number, find whether Palindrome, sum of a number...)

- வாக் இன் (Walk In) நடத்தினால் முடிந்தவரை சீக்கிரமாக சென்றுவிடவும். 10 மணி வாக் இன் என்றால் 7-8 மணிக்கே சென்றாலும் தப்பில்லை. அழைப்பின் பேரில் (Call Letter) சென்றால் 30 நிமிடம் முன்னால் சென்றாலே போதும்.

- ஒவ்வொரு கம்பெனியாக சென்று ரெசுமே கொடுத்து நேரத்தை வீணாக்காதீர்கள். பெரும்பாலான கம்பெனிகள் இ-மெயிலில் தான் ரெசுமே வாங்குகிறார்கள். அந்த நேரத்தில் உட்கார்ந்து படியுங்கள்.

-மீண்டும் சொல்கிறேன். தெரியாதவர்களுக்கு சொல்லி கொடுங்கள் . நான் அனைத்தையும் படித்துவிட்டு சொல்லி தருவேன் என்று சொல்லாதீர்கள்.

இறுதியாக என் பள்ளியின் தாரக மந்திரமான "உழைப்பே உயர்வு தரும்" (Labor Omnia Vincit) என்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

__________________________________
http://www.sanjaionline.blogspot.com/
http://groups.google.co.in/group/TamilaTamila
-----------------------------------------------------------

1 comment:

கார்த்திக் பிரபு said...

sir for your information

infosys pattern has changed before seven months for freshers

now ther are conducting test for 75 mins with 30 non verbal reasoning and 40 english questyions

but for the experienced candidates the pattern remains the same - 10 puzzles , tech intr, hr intr.


good post , keep doin the good work sir.

 
sanjai